மழைக்காலம் என்றாலே சளி, காய்ச்சல் என தொற்று வியாதிகள் வந்து பாடாய் படுத்தி எடுத்து விடும். கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் Health பிரச்னை உருவாகும்.
காய்ச்சலைவிட, சளி பிடித்தால் ஒரு வாரத்திற்கு பயங்கரமான சிரமத்தை கொடுத்துவிடும். நன்றாக தூங்க முடியாது..நன்றாக சாப்பிட முடியாது. உணவின் ருசி கூட தெரியாது.
சரி.. மழைக்காலத்தில் ஏற்படும் சளி, காய்ச்சலுக்கு இயற்கை மருந்து உண்டா? என்றால் அதற்கான இயற்கை மருந்து பொருட்கள் நிறைய உண்டு என்று உறுதியாக கூறமுடியும்.
சளி, காய்ச்சல் நீங்க பூண்டு:
இயற்கையில் கிடைக்கும் பூண்டு ஒரு அற்புதமான மருத்துவ பொருள். இந்த பூண்டு பல்வேறு வியாதிகளை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக சொல்வதெனில் தாய்ப் பால் பெருக இந்த பூண்டு செய்யும் மகிமை மகத்தானது.
ஜீரண கோளாறுகளை சரி செய்யும். மழைக் காலத்தில் ஏற்படும் சளி, காய்ச்சலுக்கு பூண்டை ரசம் வைத்து சாப்பிட்டால் சரியாகும். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதனாலேயே பூண்டு ஒரு மிகச்சிறந்த இயற்கை மருந்து பொருள் என கூறுகின்றனர்.
சளியை விரட்ட மஞ்சள் மற்றும் மிளகு:
சளி பிடித்துக்கொண்டால் பசும் பாலுடன், சிறிது மஞ்சள் பொடி, சிறிது மிளகு தூள் இரண்டையும் கலந்து பருகினால் இரண்டு நாட்களில் சளித் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம்.
நெஞ்சு சளி நொடியில் கரைய ஆட்டுக்கால் சூப்:
சளிக்கு மிகச் சிறந்த இயற்கை நிவாரணி ஆட்டுக்கால் சூப். நாட்டுக்கோழி குழம்பை ரசம் போல வைத்து குடிக்க சளி பறந்துவிடும். அந்த நாட்களில் இதுபோன்ற இயற்கை முறைகளே சளியை போக்க பயன்படுத்தப்பட்டன. உடனடி நிவாரணம் கிடைக்கும். மூக்கடைப்பு நீங்கும்.
காய்ச்சல், சளி தீர சர்க்கரை வள்ளிக் கிழங்கு:
இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து உடலுக்கு வலு சேர்க்கிறது. இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சளி காய்ச்சல் தொல்லை நீங்கும்.
பால், மீன்
பால் , மீன் பொருட்களில் வைட்டமின் D அதிகமாக உள்ளது. வைட்டமின் D சளித்தொல்லையை நீக்க கூடியது. மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், மற்றும் சுவாச கோளாறுகளை சரி செய்வதில் வைட்டமின் D ன் பங்கு அதிகம்.
மேற்கண்ட இயற்கை பொருட்களை சரியான நேரத்தில் பயன்படுத்துவதன் மூலம் மழைக் காலத்தில் ஏற்படும் சளி, காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களை விரட்டலாம்.
Tags: sali, Kaichal, malai, மழை, சளி, காய்ச்சல், இயற்கை மருந்து
சளி, காய்ச்சல் குணமாக |

0 Comments:
Post a Comment