தண்ணீருக்குள் மூச்சை அடக்கி அனைவரும் விளையாடி இருப்போம், இது ஒரு வகை முக்கிய விளையாட்டுக்கூட. நாமாக மூச்சை அடக்கி நீண்ட நேரம் வைத்திருப்பது தன்னார்வ மூச்சுத்திணறல் ஏற்படும். இதனை முறையான பயிற்சி மூலம் மட்டுமே பெற முடியும்.
இல்லையெனில் உங்கள் உயிருக்கே இது ஆபத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமான ஒரு இளைஞர் ஒன்று முதல் இரண்டு நிமிடம் வரை சுவாசத்தை கட்டுப்படுத்தலாம். இதற்கு மேல் அதிகரிக்கும்போது அது உங்களை ஆபத்தில் தள்ளும். நீங்கள் மூச்சை அடக்கும் போது உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் ஆகிசிஜன் அளவு குறையும் நமது உடலுக்குள் புதிய ஆக்சிஜனின் வரவு இல்லாமல் இருக்கும் போது உங்கள் இரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனின் அளவு குறைந்து கொண்டே வரும். இதன் பொருள் நமது மூளை மற்றும் உறுப்புகள் செயல்படத் தேவையான ஆக்ஸிஜனைப் பெறுவதில்லை என்பதாகும். நமது மூளை ஹைபாக்சிக் நிலையை அடையும்போது ஏற்படும் முதல் அறிகுறிகள் குழப்பம், முடிவெடுக்க இயலாமை, ஒருங்கிணைப்புக் கோளாறுகள் போன்றவையாகும்.
உங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு அதிகரிக்கும் நீங்கள் உங்கள் சுவாசத்தை கட்டுப்படுத்தத் தொடங்கும்போது உங்கள் உடலில் இருக்கும் ஆக்சிஜனின் அளவு குறையத் தொடங்கும், அதேசமயம் மறுபுறம் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கத் தொடங்கும். நாம் சுவாசிக்கும் போது நமது உடலில் இருந்து கார்பன்-டை-ஆக்ஸைடு வெளிவருகிறது. எனவே அதனை தடுக்கும்போது நாம் உடனடியாக ஆக்சிஜனை பெறுவதற்கு உந்தப்படுவோம். தண்ணீருக்கடியில் சுவாசத்தை கட்டுப்படுத்தும் போது இதன் அளவு அதிகரிக்காது.
மூளை பாதிப்பு
சுவாசத்தை நீண்ட நேரம் கட்டுப்படுத்தும் போது இரத்த ஓட்டத்தில் எஸ்100பி என்ற புரோட்டினின் அளவு அதிகரிக்கிறது. இது மூளையின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இது தற்காலிகமான ஒன்றாகும். மீண்டும் சுவாசிக்கத் தொடங்கிய பின் இதன் அளவு சகஜ நிலைக்கு திரும்பிவிடும். இந்த ஆய்வின் முடிவின் படி தன்னார்வ மூச்சுத்திணறல் மத்திய நரம்பு மண்டலத்தின் ஒருமைப்பாட்டை பாதிக்கிறது, மேலும் அதன் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

0 Comments:
Post a Comment