கம்ப்யூட்டரை பார்த்துக்கொண்டே இருப்பதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்

கம்ப்யூட்டரை பார்த்துக்கொண்டே இருப்பதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்: 

நாள்தோறும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி பணிபுரிபவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் கண்களிலும் வலி, உறுத்தல், எரிச்சல், உலர்வுத் தன்மை ஏற்படும்.
eye stress using iphone, computer

பொதுவாக கணினியில் தொடர்ச்சியாக 4 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிபவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் (Computer Vision Syndrome)எனப்படும் கண்சார்ந்த பாதிப்பு ஏற்படும்.

கைகளில் விரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள், தோள்பட்டை என மூட்டு இணைப்புகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டு, வலி அதிகரிக்கும்.

தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் திரையை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதாலும், வேலையில் தொடர்ச்சியான ஈடுபாடு காட்டுவதாலும் கண்கள் உலர்ந்து, இமைகள் சிமிட்டுவதைக் கூட மறந்து விடுகிறது.

இயல்பான சிமிட்டல்களின் அளவு குறைந்துவிடுகிறது.
கண்களில்  ஒரு வறட்சித் தன்மை ஏற்படும்.

இதன் விளைவாக


  • தெளிவற்ற பார்வை
  • கண்களைத் திறந்து வைத்திருக்கும்பொழுதே கண் முன்னே மின்மினிப் பூச்சிகள் பறப்பது போன்ற தோற்றம்
  • திடீரென கண்ணின் முன்னே வெளிச்சப் புள்ளிகள் தோன்றி மறைதல்
  • கண்களில் நீர்வழிதல்
  • எழுத்துக்கள் மங்கலாக தெரிதல்
  • இரண்டிரண்டாக உருவங்கள் தெரிதல்
  • கண்ணிற்கு முன்பு பனிப்படலம் மூடியதைப் போன்ற ஒரு தோற்றம்
  • இவை அனைத்துமே ஏற்படும்.

இந்த பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாப்பது எப்படி? 

கணினி இருக்கை: 

முதலில் கணினியில் பணிபுரியதக்க இருக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த இருக்கையானது ஏற்றி, இறக்கும் வகையிலும் நன்கு சுழலும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

கணினியில் உள்ள விசைப்பலகைக்கு இணையாக நீங்கள் அமரும் இருக்கையில் கைப்பிடி உங்கள்  கைகளைத் தாங்க வேண்டும். அதாவது கணினியில் உள்ள விசைப் பலகையில் விரல்களை வைத்து தட்டச்சிடும்பொழுது உங்கள் முழங்கையானது கீழே இறங்காமல்  நீங்கள் அமர்ந்திருக்கும் இருக்கையின் கைப்பிடியில் இருக்குமாறு உங்கள் இருக்கையின் உயரத்தை வைத்திருக்க வேண்டும்.

போதுமான வெளிச்சம்: 

நீங்கள் பயன்டுத்தும் கணினி திரைக்கும், கணினியிலுள்ள விசைப்பலகைக்கும் போதுமான அளவில் வெளிச்சத்தை ஏற்படுத்தி, உங்கள் பணியை நீங்கள் தொடரலாம்.

உங்களுக்கு எதிர்புறமிருந்து ஜன்னல் வழியாகவோ அல்லது வேறு வழியாகவோ வெளிச்சம் ஏற்பட்டு அது உங்கள் கண்களில் பட்டு எதிரொளிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எதிர்புறம் இருந்து வரும் வெளிச்சமானது கண்டிப்பாக உங்கள் கண்களை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கும்.

கணினித் திரைக்கும் உங்களுக்கும் தோராயமாக 33 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது உங்களை கைகளை நீட்டினால் கணினித் திரையை உங்கள் விரல் நுனி தொடும் தூரத்தில் கணினித் திரை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

வருமுன் காப்போம்:

கணினியில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும்பொழுது, கண்டிப்பாக கண்களுக்கு ஓய்வளிப்பது முக்கியம். அதாவது இருபதுக்கு இருபது பார்முலாவை பயன்படுத்த வேண்டும்.

அதென்ன இருபதுக்கு இருபது பார்முலா என்கிறீர்களா?

இருபதுக்கு இருபது: 20-20-20

கணினித் திரையையே தொடர்ந்து உற்றுப்பார்த்து வேலை செய்யாமல் இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை பார்வை வேறுபக்கம் திருப்பி, இருபது அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை அல்லது பொருள்களை தொடர்ச்சியாக இருபது நொடிகள் பார்ப்பதைத்தான் இருபதுக்கு இருபது பார்முலா என்பார்கள்.

கணினித் திரையிலேயே பார்வையை தொடர்ந்து மணிக்கணக்கில் பதிக்காமல், அதிலேயே தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் இருக்காமல் பார்வையை வேறு திசையில் திருப்பி குறிப்பிட்ட தூரத்தில் உள்ள பொருள்களை, குறிப்பிட்ட நொடிகள் பார்க்க வேண்டும்.

இருபதுக்கு இருபது பார்முலாவை பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள்:
பார்வை கணினித் திரையைவிட்டு வேறு திசையில் செலுத்தும்பொழுது கண்ணில் உளை தசைகள் இயக்கப்பட்டு, விழித்திரை லென்சின் குவிய தூரம் மாற்றி அமைக்கப்படுகிறது.

இதனால் மாறுபட்ட கண்ணிற்கு இயக்கம் கிடைக்கிறது. ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதால் கண்கள் இயல்புநிலை, இயல்பான இயக்க நிலையைப் பெறுகிறது.

வருடத்திற்கு ஒருமுறையாவது கண்களில் உள்ள பிரச்னைகளை, தகுதியான கண் மருத்துவரை அணுகி கண்சோதனை செய்துகொண்டு, ஆலோசனைப் பெறுவது உங்கள் கண்களைப் பாதுக்காக்க ஒரு அற்புதமான முன்னேற்பாடான பாதுகாப்பு வழிமுறையை ஏற்படுத்திக்கொடுக்கும்.
Share on Google Plus

About ABELIA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment