அதிமதுரம் - மருத்துவ பயன்கள் | athimathuram maruthuva payangal

அதிமதுரம் மருத்துவ பயன்கள்  

சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான பொருளை தெரியுமா? அது தான் அதிமதுரம்! உலகின் சில பகுதிகளில் குழந்தைகள், மிட்டாய் போல் அதிமதுர வேரை சுவைக்கின்றனர். இனிப்பது மட்டுமல்ல, அதிமதுரம் ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்து. சக்தி வாய்ந்த 'டானிக்'! தவிர மேலும் பல மருத்துவ குணங்கள் கொண்டது.
athimathuram
அதிமதுரம் - மருத்துவ பயன்கள்

அறிமுகம்

அதிமதுரம் 1.5 மீட்டர் உயரம் வரை வளரும் மூலிகைசெடி. நட்டபின் மூன்று (அ) ஐந்து வருடங்கள் விட்டு அறுவடை செய்யப்படும். இந்த வருடங்களில் அதன் வேர்கிழங்குகளும் வேர்களும் பரவலாக, முழுமையாக வளர்ந்திருக்கும்.

பயன்படும் பாகங்கள் - வேர்த்தண்டு கிழங்கு  மற்றும் வேர்கள்.

தண்டு கிழங்கு பூமியின் கீழ் 3-4 அடிகளில், பரவலாக கிடைக்கும்.
அதிமதுரத்தின் தாயகம் மத்திய தரைக்கடல் பிரதேசங்கள் எனப்படுகிறது. தென் ஐரோப்பிய பகுதிகள், சிரியா, இராத், துருக்கி, கிரீஸ் மற்றும் ரஷ்யாவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் தென்னிந்தியாவிலும் பயிரிடப்படுகிறது.

பழங்கால கிரேக்கர்களுக்கு அதிமதுரத்தைப் பற்றி தெரிந்திருந்தது. சீன வைத்தியத்தில் உடலை "புதுப்பிக்கும்" மருந்தாக பயன்பட்டது.

அதிமதுரம் மருத்துவ பயன்கள்

பொதுவாக அதிமதுரம் ஒரு 'நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும்.

ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக். அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண்  குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும்.

காயங்களுக்கு அதிமதுரப்பொடி + நெய் கலந்து பூசலாம். அதிமதுரக் களிம்பு + வேப்பிலை இலை காயங்களை சுத்தம் செய்யும். அதிமதுர களிம்பு + நெய் கலவை காயங்களை ஆற்றும்.

அதிமதுர வேரின் சிறு துண்டுகளை பாலில் அரைத்து. துளி குங்குமப்பூ போட்டு கலந்து, இந்த கலவையை தலையில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வரவும். சில வாரங்களில் முடிகள் தோன்றும்.

கால் ஆணிகள்  - அதிமதுரப் பொடியை கடுகெண்ணை (அ) நல்லெண்ணெயில் குழைத்து காலாணிகள் மேல் போட்டால், அவை உதிரும்.

மலச்சிக்கல் - அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீருடன் எடுத்துக் கொள்ளலாம்.

அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆசாரியர் சுஸ்ருதர் அதிமதுரத்தை அதிமுக்கியமான மூலிகையாக குறிப்பிடுகிறார். அலோபதி வைத்தியத்திலும் அதிமதுரப் பொடி பிரபலம்.

இருமல் வீட்டு வைத்தியம்

தொண்டைப்புண்களுக்கு தேன் நல்லது. தேனை வாயில் சிறிது நேரம் வைத்திருந்தால் தொண்டையில் பரவும். தொண்டையின் அழற்ச்சியை தணிக்கும். மஞ்சளும் நல்ல வீட்டு மருந்து. அரை தேக்கரண்டி மஞ்சள் பொடியை ஒரு கப் சூடான பாலில் இட்டு, சர்க்கரை சேர்த்து, தினமும் இரு வேளை பருகவும்.

அதிக அமில சுரப்பு (Acidity)

நான்கைந்து மிளகை, நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
இந்தப் பொடியை சிறிது சர்க்கரை கலந்து பாலில் சேர்த்து, தினமும் சாயங்காலம், 15 நாட்களுக்கு குடித்து வரவும்.

இளநீர் குடிக்கலாம். இளநீர் வழுக்கை (இளம் தேங்காய்) யை எடுத்துக் கொண்டால் இன்னும் நல்லது.

படுக்கும் முன் குளிர்ந்த பாலை குடிக்கலாம்.

இருமல்

எட்டு பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் பாதாமின் தோல்களை அகற்றி விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் 20 கிராம் வெண்ணெய், சர்க்கரை சேர்க்கவும். காலையிலும், மாலையிலும் இரு வேளை இந்த விழுதை சாப்பிட்டு வர இருமல் குறையும். அதுவும் உலர்ந்த இருமலுக்கு இந்த விழுது நல்ல பலன் தரும்.

நல்ல மஞ்சள் பொடி 2 கிராம் எடுத்து சூடான பாலில் (1 கப்) கரைத்து தினமும் இரு வேளைகளில், 15 நாள் குடித்து வரவும்.
துளசி சாறு 5 மி.லி. எடுத்து 10 மி.லி. தேனில் கலந்து சாப்பிடவும். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல் ஏற்படுகின்ற வாய்ப்புள்ளவர்கள், படுக்கைக்குச் செல்லுமுன் கனத்த உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதுடன், இரவு உணவிற்கும், படுக்கைக்குச் செல்வதற்கும் இடையே குறைந்தது மூன்று மணி நேரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அஜீரணம்

அஜீரணம், அதுவும் ஜுரத்துடன் கூடிய பித்த அஜீரணத்திற்கு கடூக்கி எனும் கடுகு ரோகினி நல்ல மருந்து ஆகும்.

கடுகு ரோகினி ஜுரத்தை குறைக்கும், வயிற்றுப் பூச்சிகளை அகற்றும், இதமான மலமிளக்கி வயிற்று வலியை போக்கும்.
Share on Google Plus

About ABELIA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment