உங்கள் உடல் நலனை நீங்களே கவனித்துக்கொள்ள 6 சிறந்த வழிகள்

தன் கையே தனக்கு உதவு என்று சொல்வார்கள். இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு விடயத்திலும் அப்படிதான். குறிப்பாக உடல் நலன் பேணுவதில் அவர்வர்கள் அக்கறை மிகுந்திருக்க வேண்டும். அந்த வகையில் உங்கள் உடல் நலனை நீங்களே கவனித்துக்கொள்ள அற்புதமான 6 வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நீங்கள் எப்போதும் மற்றவர்கள் அல்லது உங்கள் குடும்பத்தினருக்காக மட்டும் மாடாய் உழைத்து, ஓடாய் தேய்கிறீர்களா? அதே நேரத்தில், உங்களைப் பற்றிய அக்கறை உங்களுக்குத் துளிக்கூட இல்லையா? நீங்கள் ஒன்றும் அவ்வளவு 'பாசக்காரப் பயபுள்ளை'யாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
Top 6 way to maintenance self health care

இதற்காக யாரும் உங்களுக்கு உதவ வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அடுத்தவர்களுக்கே நீங்கள் உதவும் போது, உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள முடியாதா? மாதத்திற்கு ஒரு முறையாவது உங்களுக்கென ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

அந்த அளவிற்காவது நீங்கள் ஒரு சுயநலவாதியாக இருந்தால் தான் அடுத்தவர்களை இன்னும் நன்றாகக் கவனித்துக் கொள்ள முடியும். இப்போது உங்களை நீங்களே எப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

களைப்பு நீங்க...

அடுத்தவர்களுக்கு எப்போதும் உதவிக் கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் உடம்புக்கும் எதுவும் நேரக் கூடாது. அதற்காக உங்களுடைய உடம்பில் நோயெதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு முக்கியத் தேவை மசாஜ் செய்து கொள்வதாகும். உழைத்து உழைத்துக் களைத்துப் போன உங்களுக்கு மசாஜ் ஒரு புதுத் தெம்பையும் கொடுக்கும். உடல் களைப்பும் நீங்கும்.

நன்றாகத் தூங்க...

உங்களுக்கு வேகமாகத் தூக்கம் வருகிறது, ஆனால் தொடர்ந்து தூங்க முடியவில்லையா? கவலையை விடுங்கள், அதற்கும் மசாஜ் தான் உங்களுக்குக் கை கொடுக்கும். மசாஜ் செய்வதால் உங்கள் ஹார்மோன் அளவுகள் மாறி, தசை இறுக்கங்கள் குறைந்து, உடம்பே இலகுவாகி விடும். இதனால், உங்கள் மூளையிலுள்ள டெல்டா அலைகள் தூண்டப்பட்டு, உங்களால் நன்றாகவும் தூங்க முடியும்.

பொலிவான முகத்தைப் பெற...

பருத் தொல்லையால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா? பருக்களும், பருத் தழும்புகளும் நீங்கி, உங்கள் முகம் பொலிவு பெற ஃபேஸியல் செய்து கொள்ளுங்கள். ஃபேஸியல் செய்வதால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படுகின்றன; சிறுசிறு துளைகள் அடைக்கப்படுகின்றன. ஃபேஸியலில் பல வகைகள் உள்ளன. உங்கள் சருமத்தைப் பாதிக்காத அளவுக்கு சிறந்த ஃபேஸியலை செய்து கொள்ளுங்கள்.

கடின உழைப்புக்கு ஓய்வு!

உங்களுக்கு நோயோ, உடம்பில் வலியோ இருக்காது. ஆனால் எப்போதும் களைப்பாக இருப்பது போல் உணர்வீர்கள். இதற்குக் காரணம், நீங்கள் ஊண்-உறக்கம் இல்லாமல் ஓயாமல் உழைப்பது தான். உங்கள் கடின உழைப்புக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். பேட்டரிக்கு ரீசார்ஜ் கொடுப்பது போல தான். ஓய்வுக்கு அப்புறம், உங்களால் இன்னும் அதிகமாக உழைக்க முடியும்.

சவாலே சமாளி!

நாள்தோறும் உங்கள் வாழ்க்கையில் நிறைய சவால்களையும், துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு இருப்பீர்கள். அதற்காகப் பயந்து கொண்டும் இருப்பீர்கள். ஆனால் 'எதுவும் நிரந்தரமானதல்ல; மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். பயத்தைத் தூக்கி எறியுங்கள். உங்களை நீங்களே தேற்றிக் கொண்டு, அடுத்து வரும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.

தோற்றம் தரும் தன்னம்பிக்கை!

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். உங்கள் தோற்றம் நன்றாக இருந்தால், உங்கள் உணர்வும் நன்றாகத் தான் இருக்கும். உங்களை நன்றாக அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

முடி அலங்காரத்திலிருந்து கால் நகங்களைப் பராமரிப்பது வரை அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருங்கள். உங்களுக்கே உங்கள் மேல் இன்னும் அதிக நம்பிக்கை வளரும்.

மன அழுத்தம் நீங்க...

உங்களுக்கு மன அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளது போல் உணர்கிறீர்களா? உடனே மருத்துவரின் உதவியை நாடுங்கள்.

வயிற்றில் கொழுப்பு அதிகமாவதாலோ அல்லது உடம்பில் கார்ட்டிசோல் அளவுகள் அதிகம் இருந்தாலோ மன அழுத்தம் ஏற்படும். ஆரம்பத்தில் கூறியபடி, இதற்கும் மசாஜ் தான் சிறந்த வழியாகும்.

மசாஜ் செய்யும் போது கார்ட்டிசோல் அளவுகள் குறைந்து, மன அழுத்தமும் குறைகிறது.

நாள்பட்ட உடல் வலி குறைய...

முதுகு வலி, தோள்பட்டை வலி, தலைவலி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக தினமும் நிறைய மாத்திரைகளை எடுத்து வருகிறீர்களா? முதலில் அந்தப் பழக்கத்தை விடுங்கள்.

இதுப்போன்ற உடல் வலிகளைப் போக்கவும் மசாஜ் தான் உங்களுக்குக் கை கொடுக்கும். ஸ்வீடிஷ் மசாஜ் மற்றும் விளையாட்டு மசாஜ் செய்வதால் தசைகள் ஒழுங்காக இயங்கி, வலிகள் குறையும். இந்த இரு மசாஜ்களைத் தொடர்ந்து செய்து வந்தாலே போதும், மாத்திரைகளுக்கு 'குட் பை' சொல்லிவிடலாம்!

மேற்கண்ட ஆறு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் உங்கள் உடல் நலனை நீங்களே கவனித்துக்கொள்ள முடியும்.

Top 6 way to maintenance self health care

Tags: Self Health Care, Simple Health Care, Health tips Simple, Health maintenance Yourself. 


Share on Google Plus

About ABELIA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment