விரைவாக கர்ப்பம் தரிக்க சிறந்த 10 உணவுகள்

விரைவாக கருத்தரிக்க வேண்டுமானால், அதற்கு உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதிலும் இக்கால தம்பதியினர்கள் கருத்தரிக்க முயலும் போது, உடலில் உள்ள பிரச்சனைகளால், சில சமயங்களில் கருத்தரிக்கவே முடியாத நிலை ஏற்படுகிறது.

ஆகவே பெண்கள் கருத்தரிக்க முயலும் முன், தங்கள் உடலை ஆரோக்கியமாக, போதிய ஊட்டச்சத்து நிறைந்ததாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

Top-10-foods-to-get-pregnant-quickly


அதற்கு உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை சீரான முறையில் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கடைகளில் விற்கப்படும் உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

இங்கு கர்ப்பமாக முயலும் போது தொடர்ச்சியாக உண்ண வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், விரைவில் கர்ப்பமாகலாம்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் நிறைந்துள்ள வைட்டமின் சியானது ஹார்மோன்களை சீராக்குவதால், பெண்கள் கருத்தரிக்க முயலும் போது உணவில் சேர்த்து வந்தால், விரைவில் கருத்தரிக்கலாம்.

இரும்புச்சத்துள்ள உணவுகள்

பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாதது. பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிகம் ஏற்படும். இப்படி இரும்புச்சத்து குறைபாட்டுடன் இருந்தால், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். எனவே இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளான கத்திரிக்காய், பருப்பு வகைகள் மற்றும் சோயா போன்றவற்றை அதிகம் பெண்கள் உட்கொண்டு வர வேண்டும்.

முட்டை

வைட்டமின் டி குறைபாடு இருந்தாலும், கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். மேலும் ஆய்வு ஒன்றில் கருத்தரிக்க முடியாத 80 பெண்களை பரிசோதித்த போது, அவர்களுக்கு வைட்டமின் டி குறைபாட்டினால் தான் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. எனவே முட்டையை பெண்கள் சாப்பிடும் போது, அவர்களுக்கு வேண்டிய வைட்டமின் டி சத்தானது கிடைக்கும்.

கடல் சிப்பி

கடல் சிப்பில் ஈஸ்ட்ரோஜென்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் பி12 குறைவாக இருந்தாலும், பெண்களின் கருப்பையில் கருமுட்டையானது தங்காது.

சால்மன்

சால்மன் மீனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது. இதனை பெண்கள் உட்கொண்டால், கருத்தரிக்கும் போது விந்தணுவானது பாதுகாப்பாக கருமுட்டையை அடைய உதவிபுரியும்.

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணியில் கருத்தரிக்க அவசியமாக ஜிங்க் சத்து நிறைந்துள்ளது. இந்த சத்து குறைபாடு ஏற்பட்டால், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் அளவு குறைந்து கருத்தரிக்க முடியாமல் செய்துவிடும். எனவே ஜிங்க் நிறைந்த உணவான பச்சை பட்டாணியை உட்கொள்வது மிகவும் நல்லது.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸில் ஃபோலிக் ஆசிட் வளமாக நிறைந்துள்ளது. எனவே இதனை பெண்கள் டயட்டில் அதிகம் சேர்த்து வந்தால், ஓவுலேசனானது நல்லபடியாக நடைபெறும்.

மிக விரைவாக கர்ப்பம் தரிக்க மிகச்சிறந்த உணவு வகைகள் இவை.

Tags: Top-10-foods-to-get-pregnant-quickly, Good food for Pregnant, Simple healthy food for pregnant, Quick way to get Pregnant.
Share on Google Plus

About ABELIA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment