முகத்தில் அதிகம் குழிகள் இருக்கா? இதோ ரெமிடி

ஒரு சிலர் முகத்தில் அதிகம் குழிகள் காணப்படும். காதல் படத்தில் சந்தியாவின் அப்பாவிற்கு இருப்பது போல முகம் முழுவதும் சிறுசிறு பள்ளங்கள் இருக்கும். இதை மிக எளிதாக மறைக்கலாம்.
muga kuligal neenga
முக குழிகள் நீங்க இயற்கை ஃபேஸ் மாஸ்குகள்

முக குழிகள் நீங்க ஒரு சில பேஸ் மாஸ்குகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி முக குழிகளை மறைக்கலாம்.

முக குழிகள் நீக்கும் வெள்ளரிக்காய் மாஸ்க்


வெள்ளரிக்காய் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க உதவும். அதற்கு அதன் குளிர்ச்சித் தன்மை தான் காரணம். எனவே வெள்ளரிக்காயை துருவி, அதில் சிறிது ரோஸ்வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.


முக குழிகள் நீக்கும் முட்டை வெள்ளைக்கரு மாஸ்க்


முட்டையின் வெள்ளைக்கருவிற்கு முகத்தில் உள்ள குழிகளை மறைக்கும் சக்தி உள்ளது. அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள குழிகளை மறைக்கலாம்.

முக குழிகள் நீக்கும் பப்பாளி மாஸ்க்


பப்பாளி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க மட்டுமின்றி, முகத்தில் உள்ள குழிகளையும் தான் மறைக்கப் பயன்படுகிறது. எனவே நன்கு கனிந்த பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவு வேண்டும்.

முக குழிகள் நீக்கும் தக்காளி மாஸ்க்


உண்மையில் முகத்தில் உள்ள குழிகள், சருமத்துளைகள் திறந்து, மீண்டும் மூடாமல் இருப்பதால் ஏற்படும். தக்காளி திறந்துள்ள சருமத்துளைகளை மூட உதவும் எனவே தக்காளியை அரைத்து முகத்தில் தடவி மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

Tags: முக குழிகள், முக குழிகளை நீக்கும் மாஸ்க், ஃபேஸ் மாஸ்க், Face Mask,
Share on Google Plus

About ABELIA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment