புற்று நோய்க்கு இயற்கை மருந்து

prostate cancer people புராஸ்டேட் புற்று நோய்க்கு மருந்து - Anti Cancer Foods


தக்காளி பழம் ஒரு  anti cancer food ஆகும். இதை புற்று நோய்க்கு மருந்து என்பதைவிட, புற்று நோய் வராமல் தடுக்க பயன்படும் மிகச்சிறந்த புற்று நோய் எதிர்ப்பு உணவு எனலாம்.

புற்றுநோய் வகைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் புராஸ்டேட் புற்றுநோயை தக்காளி பழம் கட்டுப்படுத்துகிறது.

சராசரியாக ஒரு வார உணவில் ஒன்றரை கிலோ தக்காளியை உணவில் எடுத்துக்கொண்டவர்களுக்கு புராஸ்டேட் புற்று நோய் அறிகுறிகள் இல்லாமல் போகிறது. அது ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருபது சதவிகிதம் குறைகிறது.

புராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் பாதிப்புதான் ஆண்களுக்கு ஏற்படும் புராஸ்டேட் புற்று நோய்க்கு காரணம்.

நோய்கள் வராமல் தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துரைப்பது பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றைதான். மாமிச வகைகளை எந்த மருத்துவரும் பரிந்துரைப்பதில்லை. இதிலிருந்தே ஒரு மனிதன் நோயின்றி வாழ அசைவ உணவுகளை குறைத்துக்கொண்டு, சைவ உணவுகளை அதிகரித்துக்கொள்ளலாம்.

புற்று நோய் வகைகள் பல இருப்பினும், பிரிட்டன் நாட்டில் மட்டும் ஆண்களுக்கு ஏற்படும் இந்த வகை புற்று நோய் முப்பத்தைந்தாயிரம் பேருக்கு ஏற்படுகிறது. அதில் பத்தாயிரம் பேர் இதயநோய் மற்றும் பிற நோய் தாக்குதலுக்கு ஆளாகி இறந்து விடுகின்றனர்.

பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இருபதாயிரம் ஆண்களிடம் இந்த புராஸ்டேட் புற்றுநோய் குறித்து ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 50 வயது முதல் 69 வயது வரை உள்ளவர்கள். இவர்களின் வாழ்வியல் முறை, உணவு பழக்க வழக்கம் ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இவர்களில் வாரம் ஒன்றிற்கு  ஒன்றரை கிலோ தக்காளிப்பழத்தை உணவில் எடுத்துக்கொண்டவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் தோன்றுவதன் அறிகுறிகள் 18 % குறைந்திருப்பது ஆய்வில் தெரிய வந்ததது.

புற்று நோய்க்கு மருந்து பச்சை காய்கறிகள்: Anti Cancer Foods


பச்சை காய்கறிகள் புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. மேற்கண்ட ஆய்வுக்கு உட்பட்டுத்தபட்டர்களில் பச்சை காய்கறிகளை உணவாக உட்கொண்டவர்களுக்கு புற்றுநோய் தோன்றுவதற்கான அறிகுறிகள் 25 சதிவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புராஸ்டோட் புற்று நோய் வராமல் தடுப்பதில் பச்சை காய் கறிகள், பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாரம் ஒன்றிற்கு உணவுடன் இயற்கையாக விளையும் காய்கறி, பழங்களை உண்டவர்கள் கொடிய நோயான புராஸ்டோட் புற்று நோய்க்கு ஆளாவதிலிருந்து தடுக்கப்படுகின்றனர்.

ஆண்களுக்கு உருவாகும் புராஸ்டோட் புற்று நோய் வராமல் தடுப்பதற்கான உணவு தக்காளி பழத்தில் லைகோபீன் என்ற இயற்கையான வேதிப்பொருள் உள்ளது. இது புற்றோய் நோய் வராமல் தடுக்கிறது.

அது மட்டும்மலாமல் கோதுமை போன்ற உணவு தானியங்களில் இருக்கும் செலீனியம் என்ற வேதிபொருள், பாலில் உள்ள கால்சியம் போன்றவைகளும் இந்த புராஸ்டோட் புற்று நோய் வராமல் தடுப்பதற்கான காரணிகளாக உள்ளன.

இதுபோன்ற பச்சைக் காய்கறிகள், பழங்கள் மாவு பொருட்கள் ஆண்களின் புற்று நோய்க்கு மருந்து ஆகவும், புற்று நோய் வராமல் தடுப்பதில் அதிகம் பங்கு வகிக்கின்றன. இவற்றில் ஏழைகளின் ஆப்பிள் தக்காளி பழம் பதினெட்டு சதவிகிதம் புற்று நோய் வராமல் தடுக்கிறது.  பணக்கார நோயான புற்றுநோய் வராமல் தடுக்க தக்காளி பயன்படுகிறது.

Tags: புற்று நோய்க்கு மருந்து, புற்று நோய் அறிகுறிகள், புற்றுநோய் காரணம், புற்று நோய் வகைகள், புற்று நோய் மருந்து, புற்று நோய் மருத்துவம், புற்று நோய் சித்த மருத்துவம், புற்று நோய் வராமல் தடுப்பது எப்படி, புற்று நோய் பாட்டி வைத்தியம், Anti Cancer food, Anti cancer foods, Natural Anti cancer foods, Indian Anti Cancer food
Share on Google Plus

About ABELIA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment